×

பரூக்கி தலைமையில் அமைத்த மனிதவள சீர்திருத்த குழுவின் அனைத்து ஆய்வு வரம்புகள் ரத்து: சங்க நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: மனிதவள சீர்திருத்த குழு அமைத்தாலும், அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு  ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின்  கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். தமிழக அரசின் மனிதவள மேலாண்மை துறை எண்-115 என்ற அரசாணையை கடந்த மாதம் 18ம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த ஆணையின்படி மனிதவள சீர்திருத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பரூக்கி தலைமையிலான இந்த குழு 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை நிறைவேற்றப்பட்டால் அரசு வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்நிலையில், தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் உள்ளிட்ட அரசு பணியாளர் சங்க பிரதிநிதி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அதில்,  சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய கால பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தங்களுடைய கோரிக்கைகளை குறிப்பிட்டு இருந்தனர். சங்க பிரதிநிதிகளின் கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும்’’ என்று தெரிவித்ததோடு, இந்த குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் உறுதி அளித்தார்.*தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் நன்றிஅரசணை 11ஐ ரத்து செய்வதாக உறுதி அளித்துள்ள முதல்வருக்கு, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சங்க தலைவர் கு.வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வரை சந்தித்த பிறகு தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வரை சந்தித்து, அரசாணை 115ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இன்றைய தினம் முதல்வரே எங்களை அழைத்து அரசாணை 155ஐ ரத்து செய்வதற்கான உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் முதல்வரிடம் அறிக்கை அளித்தோம். நேற்று முன்தினமே அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி நேற்று எங்களை அழைத்து நேரடியாக பேசி அதை ரத்து செய்வதாக கூறி இருக்கிறார். முதல்வருக்கு தலைமை செயலக சங்கத்தின் சார்பாகவும், வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் சார்பாகவும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்….

The post பரூக்கி தலைமையில் அமைத்த மனிதவள சீர்திருத்த குழுவின் அனைத்து ஆய்வு வரம்புகள் ரத்து: சங்க நிர்வாகிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : Barouki ,HR Reform Committee ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்...